“நானும் அவரும்” நீண்ட நாள் ஆசை நனவாகிவிட்டது – பூஜா ஹெக்டே

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையும், தளபதி விஜயின் ’பீஸ்ட்’ படத்தின் நாயகியுமான பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கனவு நனவாகி விட்டதாக பதிவு வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே, தெலுங்கில் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்பட பலருடன் நடித்து விட்டார். அதேபோல் அக்ஷய் குமார் உள்பட பல பாலிவுட் நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், அவருக்கு தமிழ் திரையுலகிலும் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் தனது நீண்ட நாள் கனவான பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு தற்போது நனவாகி விட்டதாக அறிவித்து உள்ளார். மேலும் அமிதாப் பச்சனுடன் ஒரு இந்தி படத்தில் நடித்து வருவதாகவும் அதன் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த படம் குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.