விஜய் ஆண்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன்-2’ படத்தின் அப்டேட்..!

2016ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

cinema news in tamil

பிச்சைக்காரன் 2 படத்தை இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியே இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக இந்த படத்தை இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குவதாக இருந்தது.பின்னர் சில காரணங்களால் அவரால் பணிபுரிய முடியாமல் போய்விட்டது.

Advertisement

இந்த படத்திற்கு தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தீபாவளி முடிந்த பின் மீண்டும் துவங்கும் என தகவல்கள் வந்துள்ளன. மேலும் இந்த படம் 2022ம் ஆண்டு வெளியாகிறது.