நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் தருவேன் : சர்ச்சையில் சிக்கிய பாமக மாவட்ட செயலாளர்

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்த படத்திற்கு பாமகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னொருபுறம் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

tamil cinema news

மயிலாடுதுறையில் உள்ள ஒரு தியேட்டரில் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்டது. அங்க வந்த பாமகவினர் ரகளையில் ஈடுபட்டனர். சூர்யாவின் போஸ்டரை கிழித்து சூர்யாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெளியேறினார்கள்.

Advertisement

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு பாமக சார்பில் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டிக்கும் விதமாக அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ‘WeStandWithSuriya’ என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.