சந்தானத்தை கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் : இதுதான் காரணம்

யாரையும் உயர்த்தி பேசலாம், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது என ஜெய்பீம் சர்ச்சை குறித்து நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து இந்த காட்சிகள் நீக்கப்பட்டது.

Advertisement

காட்சிகள் நீக்கப்பட்ட பிறகும் பாமகவினர், வன்னியர் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னொரு புறம் சூர்யாவுக்கு பல பேர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சந்தானத்திடம் ஜெய்பீம் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “யாரையும் உயர்த்தி பேசலாம், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம். அடுத்தவங்களை புண்படுத்துற மாதிரி பேச கூடாது” என கூறியுள்ளார்.

இதனை விமர்சிக்கும் விதமாக #சாதிவெறி_சந்தானம் என்ற ஹேஷ் டேக்கை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

2013ம் ஆண்டு வெளியான என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு காட்சியில் சந்தானம் ஒரு துணை நடிகையுடன் பேசும் போது ஐந்து பத்துக்கு போறேன்ணு சொல்லிறியே அழகா தானே இருக்க ஆயிரம் ஐநூறுக்கு போனால் என்ன என்று பெண்களை இழிவு படுத்தினார்.

ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள டிக்கிலோனா’ திரைப்படத்தில் கைத்தடி ஊன்றியபடி நடக்கும் அருண் அலெக்சாண்டரைசைடு ஸ்டாண்டு’ என கேலி செய்தார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘சபாபதி’. இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ‘தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று புகைப்படத்தை வெளியிட்டு போராளிகளை இழிவுபடுத்தினார்.

காமெடி என்ற பெயரில் தொடர்ந்து பெண்களை இழிவு படுத்துவது, உருவத்தை கேலி செய்வது, மற்றவர்களை தாழ்த்தி பேசி வரும் சந்தானம் தாழ்த்தி பேசாதீங்க என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என வலைதள வாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.