பாலிவுட் நடிகையின் செல் போனை பறித்து சென்ற மர்ம நபர்கள்.

பாலிவுட் நடிகை நிகிதா தத்தா கபிர் சிங் படம் மூலம் பிரபலமானவர். இவர் மும்பை பந்த்ரா பகுதியில் இரவு நேரத்தில் நடந்து சென்ற போது நடந்த சம்பவத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது : பந்த்ரா பகுதியில் இரவு 7:45 மணிக்கு நடந்து சென்றேன். அப்போது எனக்கு பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேரில் ஒருவர் என் தலையில் தட்டினார்கள். பைக்கில் பின்னால் இருந்த ஒருவர் என் கையிலிருந்த செல்போனை பறித்து விட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.

இந்த சம்பவத்தால் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement