போலீஸ் அதிகாரியாக நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக சாருக் கான் படத்தை இயக்குவதற்காக முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் புனேயில் இந்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தனர். படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Advertisement

இந்நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியதால் படப்பிடிப்பை தள்ளிவைத்தனர். இதன் காரணமாக நயன்தாரா படத்திலிருந்து விலகிவிட்டார் என்ற தகவலும் வெளியாகியது. நயன்தாரா விலகல் குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

cinema news in tamil

உண்மை என்னவென்றால் நயன்தாரா படத்திலிருந்து விலகவில்லை. அவர் அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.