சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது – அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டது

டெல்லியில் நடைபெற்று வரும் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டது.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என 4 படங்கள் வெளிவந்துள்ளன. இதில் 2019ம் ஆண்டு வெளிவந்த ‘அசுரன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இப்படத்தில் தனுஷ் மிக அற்புதமாக நடித்திருந்தார். இவருடன் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவருடைய பின்னணி இசை அசுரன் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து.

இந்நிலையில் தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டது.

படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களுக்கும் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.

tamil cinema news
tamil cinema news