நாய் சேகர் திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ள படம் நாய் சேகர். பொங்கலை முன்னிட்டு இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. சினிமாவில் காமெடி நடிகராக நடித்துவந்த சதீஷ் இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.

naai sekar tamil movie review

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் படத்தை தயாரித்துள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கியமாக “Labrador Dog” படத்தில் நடித்துள்ளது. இதற்கு மிர்ச்சி சிவா வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.

Advertisement

மனிதனை போல நடந்துகொள்ளும் நாய். நாயை போல நடந்து கொள்ளும் மனிதன். இவர்கள் இருவருக்கும் நடக்கின்ற யதார்த்தமான நிகழ்வுகள் தான் இந்த படத்தின் கதை. அதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

ஹீரோவாக அறிமுகமாகி உள்ள சதீஷ் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். கதாநாயகி பவித்ரா லட்சுமி அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

காமெடி மற்றும் திரைக்கதையில் அதிக கவனத்தை செலுத்தி படத்தை இயக்கி உள்ளார்கள். அனிருத் வழக்கம்போல பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது.

அரைத்த மாவையே திருப்பி திருப்பி அரைத்து ரசிகர்களை வெறுப்பேற்றாமல் யதார்த்தமான கதையை சுவாரசியமாகவும் காமெடியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.