வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மோஷன் போஸ்டர்!

இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்து வரும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். நடிகர் வைகைப்புயல் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். பிறகு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

சுராஜ் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளிவந்த ‘தலைநகரம்’ படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அந்த கதாபாத்திரத்தின் பெயரிலேயே ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.