விஜய் சேதுபதியின் முகிழ் திரை விமர்சனம்

விஜய் சேதுபதி, ரெஜினா இப்படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுவாமி நாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். ரெவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி தனது மனைவி ரெஜினா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். நாய் என்றாலே பயந்து தூரமாக செல்கிறார் விஜய் சேதுபதியின் மகள். இவளின் பயத்தை போக்க நாய் குட்டி ஒன்றை வாங்கி செல்லமாக வளர்க்கின்றனர்.

Advertisement

ஒரு நாள் விஜய்சேதுபதி மகளுடன் நாய் வெளியே செல்கிறது. அப்போது ஏற்பட்ட விபத்தில் மகள் கண்முன் அந்த நாய் இறந்துவிடுகிறது. இதனால் விஜய் சேதுபதியின் குடும்பம் சோகத்தில் ஆழ்கிறது.

நாய் இறப்புக்கு நாம் தான் காரணம் என அவருடைய மகள் வருத்தத்தில் இருக்கிறார். இந்த சோகத்தில் இருந்து விஜய்சேதுபதி குடும்பம் மீண்டு வந்ததா? தனது மகளின் குற்ற உணர்ச்சியை விஜய் சேதுபதி போக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

mugizh thirai vimarsanam in tamil

படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு மனைவியாக நடித்திருக்கும் ரெஜினா இருவருமே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரெஜினாதான் படத்தில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். மகளை திட்டுவது, பாசம் காட்டுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரீஜா அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோஷம், துக்கம் என நடிப்பில் வித்தியாசம் காட்டியுள்ளார்.

ஒரு மணி நேரத்தில் படம் முடிந்து விடுகிறது. சிறிய கதையயாக இருந்தாலும் அதனை சிறப்பாக இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுவாமி நாதன். ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பெரிய பலம்.