Money Heist professor Alvaro Morte-வின் கதை

Money Heist Series, Netflix இல் வெளியாகி, அதாவது first episode 2017இல் வெளியானது. அன்றிலிருந்து இப்போது வரை சக்கைபோடு போட்டு வருகிறது. பலரும் Money Heist Series-ல் வரும் கதாபாத்திரங்களுக்கு ரசிகர்களாக மாறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக professor கதாபாத்திரத்திற்குத்தான் அதிக ரசிகர் பட்டாளம் உண்டு.

பலரும், இணையத்தில் யார் அவர், அவரது உண்மையான பெயர் என்ன என்று தேடி வருகிறார்கள். அப்படி தேடி பலர் அவரது instagram மற்றும் twitter பக்கத்தில் followers ஆக இணைந்து வருகின்றனர்.

நாமும் இப்போது Money Heist professor கடந்து வந்த பாதை என்ன, அவர் சந்தித்த சோதனைகள் என்ன என்பதை பார்க்கலாம்

Advertisement

Money Heist-ல் professor ஆக நடித்தவரின் உண்மையான பெயர் Alvaro Morte. இவர் 23 February 1975 இல் ஸ்பெயினில் உள்ள Algeciras என்ற நகரத்தில் சாதாரண middle class குடும்பத்தில் பிறந்தார். பின்னர் அவர் spain-ல் உள்ள மற்றொரு நகரமான Bujalance-க்கு குடி பெயர்த்தார்.

Alvaro Morte story Tamil

இவரும் ஒரு engineering மாணவர்தான், communications engineering படித்துள்ளார். அதற்கு பிறகு Finland-ல் உள்ள University of Tampere வில் முதுகலை பட்டத்தை முடித்தார். என்னதான் அவர் engineering படித்தாலும், அவரது ஆர்வம் நடிப்பில் இருந்தது. ஆகையால் இவர் நடிப்பின் பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.

ஒருவர் தனது இலக்கை நோக்கி நடக்கும் போது வாழ்க்கை ஒரு சோதனையை வைக்கும், அதேபோல் இவரது வாழ்க்கையிலும் ஒரு மிகப்பெரிய சோதனை வந்தது அதுதான் cancer. அவரது இடது தொடையில் cancer உள்ளது, இன்னும் 3 மாதங்கள் வரைதான் நீங்கள் இந்த உலகில் இருப்பீர்கள் என மருத்துவர்கள் மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டனர். நம்ம professor-ம் அதற்கு தயாராக இருந்தார்.

என்னதான் சோதனைகள் வந்தாலும் அதனை போராடி வெல்வதுதான் ஒரு தலைவனின் சிறந்த குணம். அதேபோல் cancer-ஐ எதிர்த்து போராடி, அதற்கு தேவையான மருத்துவங்களை நம்பிக்கையோடு எடுத்து கொண்டு சில மாதங்களில் cancer-ஐ வெற்றி கொண்டார். பின்னர் வெற்றி நாயகனாக தனது கனவான நடிப்பின் பக்கம் கவனத்தை திருப்பினார்.

Alvaro Morte with his wife Blanca Clemente

இதற்கிடையே அவர் Blanca Clemente என்ற பெண்ணே திருமணம் செய்துகொண்டு அவருக்கு ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் இவருக்கு உண்டு. மேலும் இவரும் இவரது மனைவியும் சேர்ந்து 300 Pistolas என்ற நாடக கம்பெனியை நடத்தி வருகின்றனர்.

அதற்கு பிறகு professor பல மேடை நாடகங்களில் நடித்தார். அதற்கு பிறகு கிடைத்ததுதான் Money Heist-ல் professor கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் ஐந்து முறைக்கு மேல் audition சென்று ஐந்தாவது முறை தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனென்றால் இந்த கதாப்பாத்திரத்திற்கு குறைந்தது ஐம்பது வயது இருக்க வேண்டும் மற்றும் அவர் பிரபல பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போல தோற்றமளிக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பியதால் இவர் அந்த சமயத்தில் தேர்ந்தெடுக்கப்படவில்லை ஆனால் இயக்குனருக்கு இதற்கு முன்னால் இவருடன் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் இவரை இயக்குனர் தேர்ந்தெடுத்தார்.

தனது நிஜ வாழ்க்கையில் கண்ணாடி போடமாட்டார், இப்படத்திற்காக கண்ணாடி போட்டிருந்தார் அதுவே இந்த கதாபாத்திரத்தை மேலும் அழகாக காட்டியது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இவரும் தனது நிஜ வாழ்வில் ஒரு பேராசிரியர்தான் இவர் படித்த Tampere University – வில் Stage Management பற்றி மாணவர்களுக்கு சில வகுப்புகளை அவர் எடுத்துள்ளார். ஆனால் இவர் முழு நேர பேராசிரியர் இல்லை பகுதி நேரமாக சில நேரங்களில் சில வகுப்புகளை எடுத்துள்ளார். அதனாலேயே இவரை பொதுவெளியில் பார்க்கும் ரசிகர்கள் professor என்றே அழைக்கின்றனர்.

money heist-ன் முதல் பாகம் Antena 3 எனும் spanish தொலைக்காட்சிதான் முதலில் வெளியானது, அது ஸ்பானிஷ் மக்கள் அதிகம் பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றாகும். அதற்குப் பிறகு netflix அதன் உரிமையை பெற்றது, பின்னர் உலகமெங்கும் இந்த தொடர் பிரபலமானது. இந்த தொடரில் வரும் அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் முன்பைவிட உலகமெங்கும் அதிகமாக தொடங்கியது. அதற்குப் பிறகுதான் இவரும் உலக அளவில் பிரபலமாக தொடங்கினார்.

குறிப்பாக, இந்த சீரிஸில் வரும் கதாபாத்திரத்திற்கு இடையே எந்தவித உறவு முறையும் இருக்காது, நாளடைவில் Berlin ஆக நடித்த Pedro Alonso விற்கும் Professor ஆக நடித்த Alvaro Morte நல்ல ஒற்றுமை இருந்ததால் திரைக்கதையில் சிறிய மாற்றம் செய்தார் இயக்குனர் அதுதான் முதல் பாகத்தில் இருவரும் சகோதரர்கள் என மிகப்பெரிய திருப்பத்தை திரைக்கதையில் வைத்திருந்தார் இயக்குனர் Jesús Colmenar.

திரைகதையில் Royal Mint என்ற ஒரு திட்டத்தின் மூலம் தனது குழுவை போலீசாரிடம் இருந்து திசை திருப்பி காப்பாற்றுவதற்காக சில காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் அந்த காட்சிகள் தாய்லாந்தில் உள்ள சில கடற்கரை பகுதியில் எடுக்கப்பட்டது. இந்த காட்சியின் போது நமது professor-ஐ தவிர பிற நடிகர்கள் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போதும் நமது professor திறம்பட நடித்துக்கொடுத்தார்.

ஆனால் நமது professor மிகவும் கஷ்டப்பட்டு மன அழுத்தத்தோடு நடித்த காட்சி எதுவென்றால், ஒரு கட்டத்தில் தனது காதலியை போலீசார் துப்பாக்கி முனையில் வைத்திருப்பார்கள் அதே சமயத்தில் தனது குழு நபர்களும் போலீசாரிடம் சிக்கி இருப்பார்கள், மேலும் தானும் போலீஸாரிடம் சிக்கும் தருவாயில் இருப்பார், இந்த தருவாயில் மிகவும் அவர் மனா அழுத்தில் இருப்பார், அவை அனைத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்த வேண்டும் அப்படி ஒரு கடுமையான சூழ்நிலையில் அவர் சற்று தடுமாற்றம் கொண்டார், இருந்தாலும் அந்த காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனது முக பாவனையால் பலருக்கும் தனது சூழ்நிலையை சிறந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார் அதுவே அவருக்கு மிகவும் கடுமையான நாட்களாக இருந்தது என படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.