விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் படத்தின் செகண்ட் லுக்..!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் F.I.R. இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான், கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மோகன்தாஸ்’ என்ற சைக்கோ த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி.K.S. இசையமைத்துள்ளார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் லுக் சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

latest cinema news
latest tamil cinema news