“மருதாணி” பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “அண்ணாத்த” படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான அப்டேட் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் நேற்று மூன்றாவது பாடலான “மருதாணி” என்ற பாடல் வெளிவந்தது.

Advertisement

டி.இமான் (D Imman) இசையில் உருவாகி உள்ள இந்த பாடலில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் இடம் பெற்றுள்ளனர். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் “மருதாணி” பாடலின் மேக்கிங் வீடியோ வெளிவந்துள்ளது. இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.