மரைக்காயர் படத்திற்கு முன்பதிவில் மட்டுமே இத்தனை கோடி வசூலா?

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கீர்த்தி சுரேஷ் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரைக்காயர். இந்த படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது.

கேரளாவில் அதிக திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. உலக அளவில் அதிக திரையரங்குகளில் வெளியாக போகும் முதல் மலையாளப் படம் இதுதான். ஐந்து மொழிகளில் 4100 திரையரங்குகளில் படம் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் முன்பதிவு மூலமே 100 கோடி ரூபாய் வசூல் ஆனதாக மலையாள பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளனர். இப்படி ஒரு சாதனை செய்த முதல் இந்தியப் படம் இதுதான் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement