நெகட்டிவ் ரோலில் நடிக்கும் அஜித். மறுபடியும் மங்காத்தாவா?

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிறது. போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

latest tamil cinema news

அஜித் நடிப்பில் உருவாகி அஜித் ரசிகர்களை மட்டுமல்லாது, மற்ற ரசிகர்களையும் அதிகபட்ச எதிர்பார்ப்பில் ஆழ்த்திய தமிழ் படம் தான் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

Advertisement

2011ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘மங்காத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் 50வது படமான ‘மங்காத்தா’ மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.