காலில் கூட விழுகிறேன்…அதிகாரிகளிடம் கெஞ்சிய மதுவந்தி!!

வாங்கிய பணத்தை திரும்பி செலுத்தாதலால் மதுவந்தியின் வீட்டுக்கு சீல் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடகம், திரைப்படம், அரசியல், தொழிலதிபர் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருபவர் மதுவந்தி. இவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளாவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீனஸ் காலனி 2 வது குறுக்கு தெருவில் அமைத்துள்ள ஆசியானா அபார்ட்மெண்டில் வீடு ஒன்றை வாங்கினார்.

Advertisement

இதற்காக இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் வாங்கியுள்ளார். அதன் பிறகு சில தவணைகள் மட்டுமே கட்டிய நிலையில் பின்னர் பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து வட்டியுடன் பணத்தை திரும்ப கட்ட சொல்லி இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் சார்பில் இவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் கூறவில்லை. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

தன்னுடைய வீட்டுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம், இப்படி செய்தால் தனக்கு மிகவும் அசிங்கமாக ஆகிவிடும். அவர்களின் கால்களில் கூட விழுகிறேன் என கெஞ்சியுள்ளார். இதை கன்டுகொள்ளாத அதிகாரிகள் மதுவந்தியின் வீட்டுக்கு சீல் வைத்தனர்.