நிரம்பி வழியும் முன்பதிவுகள்- மாஸ் காட்டும் சிம்பு ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது. மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர், டிரைலர், ஃபஸ்ட்லுக், ஃபஸ்ட் சிங்கிள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் இரண்டாவது டிரைலர் 10 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

Advertisement

படம் வெளியாவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இப்போதே முன்பதிவுகள் செய்ய ரசிகர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.

குறிப்பாக சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டர், அசோக் நகரில் உள்ள காசி தியேட்டரில் டிக்கெட் முன் பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.