மாநாடு பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது உண்மையா? – தயாரிப்பாளர் விளக்கம்!

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

cinema news in tamil

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படம் கொரிய படத்தின் காப்பி என அந்நிறுவனம் மாநாடு தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்ற தகவல் இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

Advertisement

டைம் லூப் திரைக்கதை யுக்தியில் வெங்கட்பிரபு மாநாடு படத்தை இயக்கியுள்ளார். இதனை படத்தின் ட்ரெய்லரிலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இந்தத் திரைக்கதை யுக்தியில் பல படங்கள் வந்துள்ளன.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பேசிய போது இது கொரிய படத்தின் காப்பி இல்லை. எந்த நிறுவனமும் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை என கூறினார். மேலும் மாநாடு படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து உலகம் முழுவதும் வெளியிட உள்ளோம் என கூறியுள்ளார்.

மாநாடு படம் தீபாவளியன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பிறகு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.