மாநாடு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று வெளிவந்தது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்தனர்.

தமிழ்நாட்டில் வெளியான மாநாடு திரைப்படம் முதல் நாளில் 5 முதல் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த வார இறுதியில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தமிழ்நாடு வசூல் ஏழு கோடி மற்றும் பிற மாநிலங்களின் வசூல் சேர்த்து அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வசூலித்து இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.