சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. சிம்பு ரசிகர்கள் மத்தியில் ‘மாநாடு’ படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது.

இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

மாநாடு படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே தீபாவளியன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ படமும் வெளிவரப்போகிறது.

எச் வினோத் இயக்கிய அஜித்தின் ‘வலிமை’ படமும் தீபாவளியன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளிவந்தால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டி இருக்கும். அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.