மாநாடு படம் மீண்டும் தள்ளி வைப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். பல தியேட்டர்களில் காலை காட்சிகள் ஹவுஸ் புல் ஆகியுள்ளது.

இந்த படம் தீபாவளியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு நவம்பர் 25 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநாடு படம் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது : “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன் தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.