‘குருப்’ படத்திற்கு இதுவரை வந்த வசூல் எவ்வளவு தெரியுமா?

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த குரூப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சுகுமார குருப் என்பவற்றின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இந்த குரூப்.

மலையாள படமான இது தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது இந்தியிலும் வெளியானது. இந்த படம் கடந்த 12 ஆம் தேதி வெளியானது படம் வெளியான 5 நாட்களிலேயே ரூ 50 கோடியை வசூலித்தது.

தற்போது இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் இந்த படம் 75 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. துல்கர் சல்மான் அவருடைய முந்தைய படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் இது மிகப் பெரிய சாதனை என்றே சொல்லலாம்.

Advertisement