‘கூழாங்கல்’ திரைப்படம் சிங்கப்பூரில் வெளியீடு

வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள படம் ‘கூழாங்கல்’. இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுள்ளது. 94 வது ஆஸ்கர் திரைப்பட விருதுக்காக சிறந்த சர்வதேச திரைப்பட போட்டியில் இந்தியாவின் சார்பில் இப்படம் கலந்துகொள்ள உள்ளது.

தியேட்டர்களில் வெளியாகத இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு முன்பாகவே சிங்கப்பூரில் இன்று வெளியிடுகிறார்கள். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர்.

விருதுகளை குவித்த ‘கூழாங்கல்’ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சர்வதேச அளவில் பல விருதுகளை இந்தப் படம் குவித்துள்ளது. ‘டைகர்’ விருதை வென்ற முதல் தமிழ்த்திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement