கீர்த்தி சுரேஷ் நடிக்கும் வாஷி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் தனது குடும்பத்தில் சொந்த தயாரிப்பில் உருவாகும் ‘வாஷி’ என்கிற படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகனாக டொவினோ தாமஸ் நடிக்கிறார்.

விஷ்ணு ராகவ் இந்த படத்தை இயக்குகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் துவக்க விழா பூஜையுடன் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இப்படத்தைப் பற்றி கீர்த்தி சுரேஷ் கூறியபோது ‘ஒரு மகளாக தந்தையின் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு எனது கனவு இப்போதுதான் நனவாகியுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

Advertisement