கைதி 2 படம் எப்போது வரும்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில்

மாநகரம் படம் மூலம் கோலிவுட்டில் இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து, இவரது இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.

Advertisement

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மிகவும் விறுவிறுப்பாக இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகம் வருகிறது என்பதை நாசுக்காக கூறிதான் முடித்திருப்பார். அன்றில் இருந்தே இரண்டாம் பாகத்திற்க்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது இதற்கு லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

அதன்படி கைதி இரண்டாம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகள் முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கி விட்டார்களாம். இன்னும் 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். தற்போது லோகேஷ் கமலின் விக்ரம் படத்திலும், கார்த்தி விருமன் படத்திலும் பிசியாக இருப்பதால் இந்த படங்களை முடித்த பின்னர் கைதி இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.