இந்தி தேசிய மொழி என்பது மூடநம்பிக்கை – நடிகர் கமல் கருத்து

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் zomotoவில் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியுள்ளார். அதில் “இந்தி இந்தியாவின் தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளவும்” என zomoto நிறுவனம் பதிலளித்தது.

பலர் இந்நிறுவனத்திற்கு எதிரான தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். இந்நிலையில் நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை.” என அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement