உலக நாயகனுக்கு கொரோன தொற்று – அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய தனக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan informs fans that he has isolated himself at a hospital after being infected with the novel coronavirus.

மேலும், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இன்னமும் நோய் பரவல் நீங்க வில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் டுவிட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement