டிசம்பரில் திரைக்கு வருகிறது ‘கடைசி விவசாயி’

‘கடைசி விவசாயி’ படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

latest cinema news

இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் ‘கடைசி விவசாயி’ படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.