தியேட்டரில் வெளியாகிறது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து, ரவுடி பிச்சர்ஸ் மூலம் தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாகும் என படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.