ஜெயம் ரவி நடிக்கும் 30வது படம். இயக்குனர் யார் தெரியுமா?

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அதன் பிறகு பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

cinema news in tamil

இந்நிலையில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புது படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இது ஜெயம்ரவிக்கு 30வது படமாகும்.

இந்த படம் வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

சமீப காலமாக ராஜேஷ் இயக்கிய திரைப்படங்கள் பெரிய வெற்றியை தேடி தராத நிலையில் தற்போது குடும்ப கதையாக இயக்கவுள்ளார். இந்த படமாவது அவருக்கு வெற்றியை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.