ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஜெயில்’ படத்தின் டீசர்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’. ஸ்ரீதரண் மாரிதாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

cinema news in tamil

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. மேலும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளது.

Advertisement

இந்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ மற்றும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டது.

இந்நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

tamil cinema news