ஜெய் பீம் படத்தில் நடித்த இவர் உண்மையிலேயே போலீஸ்தானாம்..

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

latest tamil cinema news

’ஜெய்பீம்’ படத்தில் சப்இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி என்ற கேரக்டரில் நடித்த இவர் உண்மையாகவே போலீஸ் என்பதும் அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு திரையுலகிற்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement

இவருடைய பெயர் தமிழ். ஏற்கனவே போலீஸ் வேலையில் இருந்த இவர் சினிமா ஆசையின் காரணமாக வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்துள்ளார். மேலும் இவர் ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் விக்ரம்பிரபு நடித்துள்ளார்.

’ஜெய்பீம்’ படத்தில் போலீஸ் கேரக்டருக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் இயக்குனர் ஞானசேகர் அவரை இந்த கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார்.