‘ஜெய் பீம்’ திரை விமர்சனம்

டி.ஜே. ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை சூர்யா தயாரித்து நடித்துள்ளார். இவருடன் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம், இளவரசு, எம்.எஸ் பாஸ்கர், ராவ் ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எஸ்.ஆர்.கதிர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாகியுள்ளது.

Advertisement
Jai Bhim movie thirai vimarsanam

இருளர் பழங்குடியைச் சேர்ந்த ராஜாக்கண்ணு அவருடைய மனைவி செங்கண்ணி இருவரும் கடலூர் மாவட்டத்தில் வசிக்கின்றனர். அந்த ஊர் பெரிய மனிதர் வீட்டில் ஒரு நாள் பாம்பு பிடிக்கச் செல்கிறார் ராஜாக்கண்ணு. பிறகு அந்த வீட்டில் இருந்த நகை, பணம் காணாமல் போய்விடுகிறது. ராஜாக்கண்ணுதான் இதை திருடியிருப்பார் என ராஜாக்கண்ணுவைத் தேடுகிறது காவல்துறை.

எந்த தவறும் செய்யாத ராஜாக்கண்ணுவை கைது செய்த போலீஸ் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்துத் துன்புறுத்துகிறார்கள். இதில் ராஜாக்கண்ணு இறந்துவிடுகிறார். பிறகு, ராஜாக்கண்ணுவும் அவருடன் லாக்கப்பில் இருந்த அவரது உறவினர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்கிறது காவல்துறை.

இந்த வழக்கை கையில் எடுக்கும் வழக்கறிஞர் சந்துரு (சூர்யா) உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையின் அத்துமீறலை இந்த படத்தில் துணிச்சலாக சொல்லி இருக்கிறார்கள். படம் முழுவதும் கதையை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு காட்சியும் எதார்த்தமாக உள்ளது.

செங்கேணி கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அற்புதமாக நடித்துள்ளார். வழக்கறிஞராக வரும் சூர்யா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

காவல் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் குறைவான காட்சிகளில் வந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

எம்.எஸ் பாஸ்கர் திறமையான நடிகர். ஆனால் அவருக்கு அழுத்தமான வசனங்களோ கட்சிகளோ இல்லாமல் போனது வருத்தம். படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் ‘ஜெய் பீம்’ துணிச்சல்.