உங்களுக்கு ஒரு லட்சம் தருகிறேன். மன்னிப்புகேளுங்க சூர்யா – பாமகவினர் அதிரடி

சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்துவதாக பாமகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பிறகும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் சூர்யா தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில் திருச்சி, சென்னை, சேலம் பகுதியை சேர்ந்த பாமகவினர் சூர்யாவுக்கு எதிராக புகார் அளித்து வருகின்றனர்.

Advertisement

சென்னை அம்பத்தூர் காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் ஜெய்பீம் திரைப்படம் குறித்து புகார் மனு அளித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என் சேகர், நடிகர் சூர்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அப்படி கேட்கும் பட்சத்தில் என்னுடைய சார்பாக ஒரு லட்ச ரூபாய் சூரியாவுக்கு அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.