ஜெய்பீம் சர்ச்சை : வருத்தம் தெரிவித்த இயக்குனர்.

சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவு படுத்தியதாக பாமகவினர் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டுமென குரல் எழுப்பினார்கள். ஆனால் சூர்யா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

latest tamil cinema news

இந்நிலையில் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யாவை பொருத்து இருக்கும் சொல்வது துர்தஷ்டவசமானது.

Advertisement

பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது தான் சூர்யாவின் நோக்கம். சில விநாடிகள் மட்டுமே வரும் அந்த காலண்டர் ஷூட்டிங்கின்போது எங்கள் கவனத்தில் வரவில்லை. இயக்குனராக நான் மட்டுமே பொறுபேற்க வேண்டிய விஷயம் இது. இதனால் மன வருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.