“ஒரு வேல துப்பாக்கி பார்ட் 2வ இருக்குமோ?” – குழப்பத்தில் ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவர போகும் தளபதியின் 65வது படம்தான் பீஸ்ட். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் தளபதியின் பிறந்த நாள் அன்று வெளியிட்டது.

அதில் தளபதி விஜய் கையில் துப்பாக்கியுடன் இருப்பர். அவர் பின்னால் புகை மூட்டமாக இருக்கும். ஷாப்பிங் மாலில் ஊடுருவிய தீவிரவாதிகளை ராணுவ வீரரான விஜய் மற்றும் சக வீரர்கள் போராடி மக்களை காப்பாற்றுவதே பீஸ்ட் படத்தின் கதை.

Advertisement
beast movie update tamil

இதேபோல் துப்பாக்கி படத்திலும் தளபதி விஜய் ராணுவ வீரர் ஜெகதீஷ் ஆக நடித்து தீவிரவாதிகளை அழிப்பார். இதனால் இப்படம் துப்பாக்கி பார்ட்-2 என சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

எது எப்படியோ, நெல்சன் திலீப் குமார் இயக்கிய டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், பீஸ்ட் படமும் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் என நம்புவோம்.

பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் ரவிச்சந்திரன் பீஸ்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.