நந்திதா நடிப்பில் வெளியான ‘ஐபிசி 376’ திரை விமர்சனம்

நந்திதா நடிப்பில் வெளியான படம் ஐபிசி 376. இந்த படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ளார். யாதவ் ராமலிங்கம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ipc 376 movie review in tamil

நந்திதா நேர்மையான போலீஸ் அதிகாரி. இவருக்கு மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்புகிறார். அந்த குருஞ்செய்தியில் வருவது போல நிஜத்திலும் நடக்கிறது. பிறகு ஒரு தொழிலதிபர் குறித்து தகவல் கிடைக்கிறது. அந்த கொலை தொழிலதிபர் செய்யப்பட உள்ளதாக மர்ம நபர் தெரிவிக்கிறார்.

Advertisement

இதையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலதிபரை நேரில் சந்தித்து, “உங்களது உயிருக்கு ஆபத்து” இருப்பதாக சொல்கிறார் நந்திதா. ஆனால் அந்த தொழிலதிபர் நந்திதா பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறார். பிறகு அந்த தொழிலதிபர் கொல்லப்படுகிறார்.

இதையடுத்து கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நந்திதா. இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. இறுதியில் அந்த கொலைகாரனை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சசிகுமாரின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘அசுரவதம்’ படத்தில் நடித்த நந்திதா ஸ்வேதா, இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் துணிச்சலுடன் நடித்து அசத்தி இருக்கிறார். சூப்பர் சுப்பராயனின் சண்டை காட்சிகள் அருமை. கதபாத்திரங்களை நன்றாக தேர்வு செய்த இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்.

தில்ராஜின் ஒளிப்பதிவும், யாதவ் ராமலிங்கத்தின் பின்னணி இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.