என்னது இளையராஜா ட்விட்டர்ல இருக்காரா? இப்பதான் தெரியிது..

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரிய வரம் என்று தான் சொல்லவேண்டும். தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது, 2018 ல் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் கமலுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நலமாக வரவேண்டும் சகோதரரே கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்” என அதில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இசைஞானி இளையராஜா ட்விட்டரில் இருப்பது பலபேருக்கு தெரியாது. ராஜா ட்விட்டர்ல இருக்காரா, இப்ப தான் பார்க்கிறேன் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவருக்கு Followers அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.