‘க்’ திரை விமர்சனம்

யோகேஷ், அனிகா நடிப்பில் இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘க்’. ஜீவி படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய பாபுதமிழ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்துக்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார்.

ikk movie thirai vimarsanam

கதாநாயகன் யோகேஷ் கால்பந்து விளையாட்டு வீரர். ஒரு விளையாட்டின் போது தலை மற்றும் காலில் காயம் ஏற்படுகிறது. பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்போது அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக ஒரு கொலை நடப்பதை பார்க்கிறார்.

அந்த கொலையை பற்றி காவல்துறை மற்றும் மருத்துவர்களிடம் தெரிவிக்கிறார். ஆனால் அவர்கள் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என கூறுகிறார்கள். இதனால் நாயகன் யோகேஷ்க்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது.

Advertisement

அந்த பிரச்சனையிலிருந்து யோகேஷ் மீண்டு வந்தாரா? அந்த கொலையை செய்தது யார்? அதற்கான காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

ikk movie vimarsanam

படத்தின் இரண்டாம் பாதியில்தான் கதைத் தொடங்குகிறது. வசந்த் சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகேஷ் புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்துள்ளார். இவரது மனைவியாக வரும் அனிகா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

குரு சோமசுந்தரத்தின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். மேலும் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வசனங்கள் மற்றும் காட்சிகளை கவனித்தால் மட்டுமே படத்தின் கதை நமக்கு புரியும்.

அறிமுக இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஸ் தனது பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

மொத்தத்தில் ‘க்’ ரசிக்கலாம்.