இனி ஷங்கர் படங்களில் நடிக்க மாட்டேன் – வடிவேலு உறுதி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இந்த படத்தை ஷங்கர் தயாரித்தார். படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார்.

cinema news in tamil

இந்த படத்தால் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற பிரச்சனை வெடித்தது. பிறகு வடிவேலு தமிழ் படங்களில் நடிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.

Advertisement

ஒரு வழியாக தடை நீக்கப்பட்ட பிறகு லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார்.

படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் வடிவேலு ‘எனக்கு ஏற்ப்பட்ட துன்பம் போன்ற துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்கமுடியாது. என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது. நண்பன் விவேக் மறைவு நாட்டுக்கும் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு. இனிவரும் காலங்களில் இயக்குநர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.