சிம்பு படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் இயக்குனர்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் வெளியானது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

tamil cinema news

கெளதம் மேனன் வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது சிலம்பரசன் நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

Advertisement

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் சிம்புவின் லுக் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ எடையை குறைத்துள்ளார்.

இந்நிலையில் ‘பாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் 5’, ‘தி ஸ்பை நெக்ஸ்ட் டோர்’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்த லீ விட்டேகர் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் சண்டைக் காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். முதல் கட்டப் படப்பிடிப்பு நேற்றிரவு மும்பையில் நடந்துள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.