10 சவரன் நகை திருட்டு – காவல் நிலையத்தில் புகார் அளித்த நடிகர் சூரி

நடிகர் சூரி மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கும் மண்டபத்தில் செப்டம்பர் 9ம் தேதி தனது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இதில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சீமான், கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்த சூரியை ரசிகர்கள் பாராட்டினார்கள். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியின்போது 10 சவரன் நகை திருடு போயுள்ளது. இது குறித்து கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூரி. இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக சூரி நடித்துள்ளார்.