‘காக்க காக்க’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா கவுதம் மேனன்?

இயக்குனர் கெளதம் மேனன் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ‘அன்பு செல்வன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தை கெளதம் மேனன் இயக்கினார். அதில் சூர்யாவின் கதாபாத்திரம் அன்பு செல்வன்.

Advertisement

தற்போது கெளதம் மேனன் நடிக்கும் படத்தின் தலைப்பு உள்ளதால் இது ‘காக்க காக்க’ படத்தின் அடுத்த பாகமா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

‘அன்பு செல்வன்’ படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கவுள்ளார். சிவா பத்மாயன் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

latest cinema news

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கெளதம் மேனனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.