புனித் ராஜ்குமார் இறந்து போன அதிர்ச்சியில் 3 ரசிகர்கள் உயிரிழப்பு..!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனித் ராஜ்குமாருக்கு பல நடிகர்கள் நடிகைகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தி கேட்டு 3 ரசிகர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 21). இவர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர். புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்ட இவர் துக்கம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதேபோல் முனியப்பன், பரசுராம் என்ற ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

cinema news in tamil

புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும் அவர் தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார்.