பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். இவர் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த ராஜ்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil cinema news

புனித் ராஜ்குமார் இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

புனித் ராஜ்குமாரை பார்க்க அவரின் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

பல நடிகர் நடிகைகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். புனித் ராஜ்குமார் 4 முறை கர்நாடக மாநில விருதையும், 5 முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் வென்றவர்.

இவருடைய மரணம் கன்னட திரைத்துறை மட்டுமல்லாது இந்திய திரைத்துறையையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.