இந்தப்பக்கம் டைவர்ஸ் அந்தப்பக்கம் வில்லத்தனம் – பிரபல நடிகரின் மாஸ்டர் பிளான்

சினிமா பிரபலங்கள் எப்பவுமே ஏதோ ஒரு ஆசையில் காதலித்து திருமணம் செய்வது, பின்னர் சில வருடங்களிலேயே விவாகரத்து பெறுவது வாடிக்கையாகிவிட்டது. என்னப்பா பிரச்சனைன்னு கேட்ட கருத்து வேறுபாடு என்று கூறுவார்கள். திருமணத்திற்கு பிறகு தனது மனைவி நடிக்க கூடாது என்று நடிகர்கள் சட்டம் போடுகிறார்கள், ஆனால் நடிகைகள் நீங்க நடிக்கிறிங்க நாங்க நடிச்சா என்ன தப்பு என்று பெரும் வாக்குவாதாமே நடத்தி சிலர் பிரிந்து விடுகிறார்கள். சிலர் ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள்.

இப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்தில் பிரபலமான ஒரு விவாகரத்து ஒன்றில் நடந்துருக்கு. அவரு திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம்னு சொல்ல, நான் நடிப்பேன்னு இவுங்க சொல்ல ஒரு பனிப்போரே நடந்துருக்கு. அந்த குடும்ப மூத்த நடிகரும் இப்படித்தான் அவரது நடிகையிடம் சொல்லியிருக்கார். அவுங்களும் அமைதியா இருந்துட்டாங்க. அதே சட்டத்தை இங்கு சொல்லவும் பிரச்சனை பெரிதாகி விவகாரத்துல வந்து முடிஞ்சது.

Advertisement

பின்னர், அந்த நடிகை சமூக வலைத்தளங்களில் இதை பற்றி நாசுக்காக கருத்து சொல்லி வருகிறார். ஆனால், அந்த நடிகர் இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் ஒரு வில்லத்தனத்தை செய்து வருகிறாராம்.

அது என்னென்ன, அவருக்கு தெரிந்த முக்கிய திரை நண்பர்களிடம் அவுங்களுக்கு படம் கொடுக்க வேண்டாம் அப்படின்னு சொல்லி வச்சுருக்காராம். இதனால் அந்த நடிகைக்கு அந்தப்பக்கம் வாய்ப்பு வரவே இல்லையாம்.

வடிவேலு பாணியில் சொன்ன “என்ன ஒரு வில்லத்தனம்”