எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இது சூர்யாவுக்கு 40வது படம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

டி இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.