சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் இதனை தயாரித்துள்ளது. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

2021 பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.