இட்டர்னல்ஸ் (2021) விமர்சனம்

கிட் ஹாரிங்டோன், ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மேடன் உள்ளிட்ட பாடல் நடித்துள்ளனர். சோலி ஜாவோ இப்படத்தை இயக்கியுள்ளார். ராமின் டிஜவாடி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

eternals movie thirai vimarsanam

பல ஆயிரம் ஆண்டு முன்பு 10 சூப்பர் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் இட்டர்னல்ஸ், டிவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட மிருகங்களை அழித்து மனித இனத்தை காப்பாற்றுவதற்காக அனுப்பப்படுகிறார்கள். அந்த 10 சூப்பர் ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அவர்களை கொல்லவும் முடியாது. வயதும் ஆகாது.

Advertisement

தனது சக்தியை பயன்படுத்தி உலகத்தில் உள்ள அனைத்து டிவியண்ட்ஸ்களையும் அழித்து விடுகிறார்கள். தற்போது இந்த காலத்தில் வாழ்ந்து வரும் அதிக சக்தி கொண்ட டிவியண்ட்ஸ் ஒன்று அதே 10 சூப்பர் ஹீரோக்களை ஒவ்வொருத்தராக அழிக்கிறது. அவர்களிடம் இருந்த சக்தியையும் எடுத்துக் கொள்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட டிவியண்ட்ஸ் மறுபடியும் எப்படி வந்தது? டிவியண்ட்ஸ்களை அழித்தார்களா? சூப்பர் ஹீரோக்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பென் டேவிஸ் ஒளிப்பதிவும் ராமின் டிஜவாடியின் பின்னணி இசையும் சிறப்பு. 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்திற்கு பிறகு ஆரம்பிக்கும் புதிய கதை என்பதால் இந்த படத்தில் கதைக்கு மட்டும் அதிக முக்கியத்தும் கொடுத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் சோலி ஜாவோ.