‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரை விமர்சனம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புதிய சட்டத்தை அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதனை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் தான் என்னங்க சார் உங்க சட்டம். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Yennanga Sir Unga Sattam movie vimarsanam in tamil

புதுமுகம் பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடித்துள்ள இந்த படம் சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பீச்சாங்கை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்.எஸ்.கார்த்திக், இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். குணா பாலசுப்ரமணியம் படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertisement

படம் இரண்டு பாகங்களாக செல்கிறது. முதல் பாதியில் சாதி, மதம், காதல், காமெடி என செல்கிறது. இரண்டாவது பாதியில் சாதி ரீதியான இடஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற கருத்தை வைத்து படம் நகர்கிறது. முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் இதில் வேறு கதாபாத்திரத்தில் வருகின்றனர்.

ஏழைகளுக்கு கல்வியாக இருந்தாலும் சரி வேலையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சரியாக வேலை செய்கிறதா? என்கிற கதையை நோக்கி படம் செல்கிறது.

படத்தில் நடித்த அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக ரோகினி நடிப்பு அருமை. தயாரிப்பாளராக வரும் பகவதி பெருமாள் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார்.

பாடல்களில் ‘ஜீரக பிரியாணி’ என்ற பாடல் ரசிக்க முடிகிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் இந்த படம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.